வர்ண் வர்ணப் பூக்கள்..

வியாழன் கவிதை நேரத்துக்காக…!
கவி இலக்கம் – 2175
வர்ண வர்ணப் பூக்கள்..

வாசம் தினம் வீசும்
வர்ண முகம் காட்டும்
கர்ணன் போலும் குணம்
காலை மலரும் இனம்
சினம் தவிர்க்கும் பூக்கள்
சிந்தை கவரும் பாக்கள்
வர்ணம் எத்தனை உண்டோ
அத்தனை வடிவம் தாங்கும்..

கதிரவன் ஒளி பட்டு
கண்கள் மெல்ல திறக்கும்
சிரிக்கும் இதழ் விரித்து
சிகரம் தொடும் அழகும்
மகரந்த மணிகள் சுமக்கும்
மலர்ந்த முகம் கவரும்
இறைவன் ஏற்கும் பூக்கள்
இறவா அழகு கூட்டும்…
சிவதர்சனி இராகவன்
3/7/2025

Nada Mohan
Author: Nada Mohan

ஜெயம் நியதி நடப்பவைதான் நடக்குமென்பது காலதேவன் கணக்கு கடந்துபோகும்  நாட்களெல்லாமதை சொல்லிவிடும் உனக்கு தலைகீழாய் நடப்பினும் நிகழவேணுமென்பதே...

Continue reading

செல்வி நித்தியானந்தன் நியதி காலத்தின் நியதி கட்டாயமாகும் ஞாலத்தின் நியதி மாறுபாடாகும் பாலமாய் நியதி இணைவாகும் கோலமாய் நியதி வேறுபாடாகும் வாழ்வின் சக்கரம் வரமாகும் வீழ்வதும் உயர்வதும் பாடமாகும் விதியின் விளையாடல் எதுவாகும் விடை புரியாதென்பதே இருப்பாகும் மதியின்...

Continue reading