இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு

இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ இயற்கை தரும் பயனில் எமதுவளம் அயராத கொடைகளை அழிக்கும் மனிதர்கள் மரத்தை...

Continue reading

கடலலை

நகுலா சிவநாதன்

கடலலை

விடாமுயற்சி உன்னில் கண்டேன்
விந்தை உலகின் வியப்பு கண்டேன்
சிந்தைக்குள்ளே தெளிவு கண்டேன்
சிறப்பாய் வாழத் தெரிந்துகொண்டேன்

முயற்சி என்ற முனைப்பாலே
முயலும் உலக வாழ்வினிலே
அயற்சி யில்லா நிலைகளிலும்
அயரா உழைப்பு வேண்டுமே!

கடலைப்போலே முயன்றிடு நீ
கனிவாய் ஓடி உழைத்திடு நீ
வரவுக்குள்ளே செலவுண்டு
வண்ண வாழ்வை அமைத்திடுநீ

அலைபோல் எண்ணம் பரந்துவர
அமைதி என்றும் நிலைத்து நிற்க
சிலையாய் இறைவன் அருளினிலே
சிந்தை உலகை வென்றிடுநீ

நகுலா சிவநாதன் 1815

Nada Mohan
Author: Nada Mohan

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

Continue reading

செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

Continue reading