அது ஒரு கனாக்காலம்

ரஜனி அன்ரன் (B.A) “அது ஒரு கனாக்காலம்“ 07.08.2025

அதுஒரு கனாக்காலம் அழகிய நிலாக்காலம்
அறுவராய் ஒன்றுகூடி மகிழ்ந்தகாலம்
பொறுப்புக்கள் எதுவுமின்றி
கவலைகள் துன்பமின்றி
களிப்போடு வாழ்ந்தகாலம் !

அன்பு பாசம் நேசம் சேர்ந்து
உயிரின் இசையைப் பாடியகாலம்
உறவுகளின் மகிழ்வில் திளைத்தகாலம்
நினைவுகளின் கோர்வையில் பூத்தகாலம்
பூங்காற்றுத் தாலாட்ட
முற்றத்து வெண்மணலில் கூடியிருந்து
பாய்விரித்து பால்நிலாவை ரசித்தபடி
வாய்நிறையக் கதைகள் பேசியகாலம் !

நிஜம்உறங்க கனவுகளில் மிதந்தகாலம்
வார்த்தை ஜாலங்களால் கட்டிய கனவிற்கு
வானமே வளைந்து சாயல் கொடுத்தகாலம்
கனவுகள் எல்லாம் நிஜமாகுமா?
அந்தக் கனாக்காலம் ஓடிவிட்டது
நிழல்போல ஞாபகங்கள் மட்டும்….எஞ்சியபடி !

ராணி சம்பந்தர் மார்கழியில் தொங்கிய திங்கள் ஊர் கழிப்பில் தங்கிய சந்திரன் சொந்தக்காரப் பங்கழிப்பன்றோ சிறுவரில் தூங்க அம்புலிமாமியே சிவப்பு...

Continue reading