ஆத்மராகங்கள்

சக்தி சிறினிசங்கர் தமிழ்மணம் கமழும் தேசத்தை நேசித்த நெஞ்சங்களில் சுமந்தனர் நஞ்சுமாலையை நெஞ்சில் துணிந்தனர் கொஞ்சும் தமிழ் காக்க மறந்தனர்...

Continue reading

சின்ன வயதினிலே

சின்ன வயதினிலே
சிறகுகள் முழைத்த
சிட்டுக் குருவியாய்
சிரித்து மகிழ்ந்தோம்.

வளைந்த தெருவெல்லாம்
வானவில்லும் கைவசமென
வண்ணக் கனவுடன்
வலம் வந்தோம்

உறவுகளும் நண்பர்களாய்
உருண்டோடிய காலம்
தோள் கொடுக்கும் தோழர்களும்
துக்கம் காணாக் காலமது.

யுத்த காலம் மொத்தமாய் வர
யோகம் இழந்து துயராய் சேர
நெஞ்சம் நிறைந்த பாரமது
நேசத்தை தொலைத்த சின்ன வயதுக் காலமுமிதுவே.

Jeba Sri
Author: Jeba Sri

வசந்தா ஜெகதீசன் கல்லறைகள் திறக்கும்..... விடுதலை வேட்கையும் வீரத்தின் உணர்வும் ஓன்றித்த போர்க்காலம் ஓயாத அலை போல அவலமும் அழிவும்...

Continue reading