முயற்சி தரும் பயிற்சி 774

செல்வி நித்தியானந்தன் முயற்சி தரும் பயிற்சி சரீரத்தின் பாதுகாப்பு சஞ்சலமற்ற தற்காப்பு சந்தோச முயல்வு சரிநிகரான நகர்வு காலையிலே. சேர்வும் கற்றதை...

Continue reading

முயற்சி தரும் பயிற்சி

செல்வி நித்தியானந்தன் முயற்சி தரும் பயிற்சி சரீரத்தின் பாதுகாப்பு சஞ்சலமற்ற தற்காப்பு சந்தோச முயல்வு சரிநிகரான நகர்வு காலையிலே. சேர்வும் கற்றதை...

Continue reading

உயிர்க்குமா சுவடுகள்….

வசந்தா ஜெகதீசன்
காலச்சக்கரப் பிடிக்குள்ளே
கணதி நிறைந்த வலிக்குள்ளே
தமிழரினமே புதைந்தது தலைவிதி இதுவென நொந்தது
காணாமல் போனோர் கதறல் ஒலி
கவலையில் கருகிடும் மனிதவலி
புதைகுழித் தோண்டலில் உடலங்கள்
உருக்குலைந்த காட்சிப் படிமங்கள்
வெந்து துடிக்குது சிந்தையே
வேதனை வெடிக்குது விம்மியே
அன்றைய பொழுதின் அவலப்பிடி
அனுதினம் வதைபட்ட ரணத்தின் வலி
பாலகர் முதலாய் பற்பல உறவாய்
தேடலில் அலைந்தோம் தினம் தினம் வெந்தோம்
புதைகுழி சாட்சியம் கொல்லுது மனசை
பள்ளிப்பையுடன் பாலகர் புதைப்பு
காட்சியாய் சாட்சியாய் கணதியில் இதயம்
காணாமல் போனோர் உயிரின் சுவாசம்
உயிர்க்குமா சுவடுகள் உண்மைக்கு உறுதியாய்!நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

Continue reading