உயிர்க்குமா சுவடுகள்

ஜெயம் தங்கராஜா

அரச பயங்கரவாதம் செய்ததே அரக்கத்தனம்
சரணடைந்தோரையும் கொன்று புதைத்த மிருகத்தனம்
காணாமல் ஆக்கப்பட்டோர் வருவார்களேயென்ற கனவுகள்
வீணாகிப்போனதால் சுக்குநூறாகியதே உறவுகளின் மனங்கள்

நீண்டுசெல்கின்றது மனிதப் புதைகுழிகளால் தாயகம்
மீண்டுமொருகுழி செம்மணியில் பதைபதைக்கின்றது நெஞ்சகம்
தாயோடு சேயையும் சேர்த்தே சிதைத்து
நேயமேயில்லாமல் பிடிபட்டவரை கொன்று புதைத்து

பாரிய மனித புதைக்குழிகள் ஆயிரக்கணக்கில்
பாரில் இதைக்கண்டும் காணாத போக்கில்
மனித உரிமை ஆணையமே விடைகொடு
இனியேனும் அதிகாரத்தின் கொடூரங்களைத் தடு

Nada Mohan
Author: Nada Mohan

சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

Continue reading