தெரியாத வேர்கள்

ஜெயம்
கவிதை 783

தெரியாத வேர்கள்

மண்ணுக்குள்ளே புதைந்திருந்து மரத்தை வளர்க்கும் தாகம்
மண்ணுக்கு மேலே விருட்சமது
மறைந்திருக்கும் வேர்களின் தியாகம்

கம்பீரமான காட்சியின் இருப்பாக மரம்
அது சிதையாத மடியாத வேர்களின் வரம்
கிளைகளில் கண்கவர் மலர்களின் தரிசனம்
உழைப்பில் களைக்காத வேர்களின் கரிசனம்

புயலும் மழையும் மரத்தை வீழ்த்தப்பார்க்கும்
இயலுமட்டும் மரத்தை ஆணிவேரும் காக்கும்
நீளும் ஓடும் பூமிக்குள்ளே வளங்களைச்சேர்க்க
வாழும் மரத்தின் கிளையையும் இலையையும் காக்க

சுவையான கனிகளை தாங்கிய கிளைகள்
அவையாவும் கடமையால் உண்டான நிலைகள்
உண்மையில் வேர்கள் கடவுளைப் போன்றவை
எண்ணிப்பார்த்தால் கண்னெனக்காக்கும் பெற்றோராக அவை

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் மார்கழியில் தொங்கிய திங்கள் ஊர் கழிப்பில் தங்கிய சந்திரன் சொந்தக்காரப் பங்கழிப்பன்றோ சிறுவரில் தூங்க அம்புலிமாமியே சிவப்பு...

Continue reading