முயற்சி தரும் பயிற்சி 774

செல்வி நித்தியானந்தன் முயற்சி தரும் பயிற்சி சரீரத்தின் பாதுகாப்பு சஞ்சலமற்ற தற்காப்பு சந்தோச முயல்வு சரிநிகரான நகர்வு காலையிலே. சேர்வும் கற்றதை...

Continue reading

முயற்சி தரும் பயிற்சி

செல்வி நித்தியானந்தன் முயற்சி தரும் பயிற்சி சரீரத்தின் பாதுகாப்பு சஞ்சலமற்ற தற்காப்பு சந்தோச முயல்வு சரிநிகரான நகர்வு காலையிலே. சேர்வும் கற்றதை...

Continue reading

” மகாகவி “

ரஜனி அன்ரன் (B.A) “ மகாகவி “ 11.09.2025

எட்டயபுரத்துக் கவிஞன்
எட்டுத் திக்கிலும் தமிழ் முழக்கம் செய்ததீரன்
புரட்சியென்ற வித்தைக்கு சொந்தக்காரன்
பட்டை தீட்டினானே பைந்தமிழுக்கு
அகவை முப்பத்தியொன்பதில்
அழைத்தானே காலனும் விரைந்து
புரட்டாதித் திங்கள் பதினொன்றிலே !

கன்னித்தமிழுக்கு மின்னல் வேகத்தில்
சிந்துப்பாவாலே சந்தக்கவிகளை
புரட்சிப் பாக்களாய் வடித்த புரட்சிக்கவிஞன்
தெய்வப்பற்று தேசீயப்பற்று மண்பற்றென
கவிகளை முழக்கிய கவிஞன்
கவித்திறனாலே கனல்மூட்டிய புரட்சியாளன் !

இயற்கையை நேசித்த மானிடன்
இலக்கணச் சட்டங்களை தகர்த்தெறிந்து
இலகுநடையில் புதுக்கவிபடைத்த புதுமைக்கவி
வசனக்கவியை தமிழில் அறிமுகமாக்கி
கவிப்பரப்பை அழகுபடுத்திய கவிஞன்
நூற்றாண்டு கடந்தும் நினைவில் நிற்கிறார்என்றும் !

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

Continue reading