ஊரெழுவின் மெழுகுவர்த்தி

ரஜனி அன்ரன் ( B.A ) “ ஊரெழுவின் மெழுகுவர்த்தி “ 18.09.2025

உலகே விழித்திருக்க ஊரெல்லாம் பார்த்திருக்க
உருகஉருக உருக்கியது தன்னைத்தானே
உணர்த்தியது அறப்போரை
ஊரெழுவின் மெழுகுவர்த்தி
உடலும் மருத்துவத்திற்கு
உணர்வும் தமிழுக்குமென
உரமாக்கியதே உயிரினைத் தமிழ்வேருக்கு !

வேருக்கு உரமாகி வேட்கையின் குறியாகி
அறவழிநின்று அகிம்சை கொண்டு
ஆன்மபலத்தில் உலகை வென்று
இனத்தின் துயரைத் துடைக்கவென்று
மனத்தை இறுக்கி உயிரையே ஈந்த
உணவினை வெறுத்த உன் உயிர்த்தீபம்
உணர்வாக எம்நெஞ்சில் சுடரானதே !

சுடரொளி நீதான் சுவடும்நீதான்
தமிழ்வேருக்கு உரமான தியாகியும் நீதான்
நல்லூரான் வீதியிலே நடந்த வேள்வியில்
ஊரெழுவின் மெழுகுவர்த்தி
ஊரறிய உலகறிய தீப்பொறியாச்சுதே !

ராணி சம்பந்தர் மார்கழியில் தொங்கிய திங்கள் ஊர் கழிப்பில் தங்கிய சந்திரன் சொந்தக்காரப் பங்கழிப்பன்றோ சிறுவரில் தூங்க அம்புலிமாமியே சிவப்பு...

Continue reading