“புல்லாங்குழல்”

நேவிஸ் பிலிப் கவி இல (494)

மூங்கில் தண்டினிலே
வண்டுகள் குடைந்த துளைகளிலே
நுளைந்த காற்று இசையாய்
வெளிவரக் கண்டான் மனிதன்

மூங்கில் தண்டெடுத்தான்
தீயினால் சுட்ட போதும்
துளையிட்டு வருத்தும் போதும்
வருந்தாது
காற்றை இசையாக்கித் தந்த
வித்தக கருவி

உருவில் சிறிதானாலும்
உணர்வில் பெரிது
மௌனமாய் இருக்கும்
காற்று தன்னைத் தீண்டும் வரை

காதோரம் உறவாடி
இதழ் குவித்து விரல் பதித்து
சுவாசக் காற்று உள் நுழைய
அன்று முதல் இன்று வரை

எம்மொழியும் சம்மதமாய்
இனிய நல் இசை தந்து
கானம் இசைத்து கவலை தீர்க்க
விழிகள் மூடி செவிகள் திறக்க
தேனருவியாய் இசை வெள்ளம்
பாய்ந்து வரும் .

Author:

ராணி சம்பந்தர் மார்கழியில் தொங்கிய திங்கள் ஊர் கழிப்பில் தங்கிய சந்திரன் சொந்தக்காரப் பங்கழிப்பன்றோ சிறுவரில் தூங்க அம்புலிமாமியே சிவப்பு...

Continue reading