மூப்பு வந்தாலே (731) 02.10.2025

செல்வி நித்தியானந்தன்.
மூப்பு வந்தாலே

முதுமை என்றாலே
முழுதாய் பயமும்
இளமை மறைந்து
இன்னலும் தொடரும்
காலத்தின் சக்கரம்
வேகமாய் செல்லும்
கோலத்தின் மாற்றம்
சோர்வாய் போகும்
நடையும் இல்லாது
வலியும் தோன்றும்
தூக்கம் மறந்து
பயத்தை தேடும்
மூப்பு நிலை என்றும்
முனகும் செயல் தொடரே
தீர்ப்பு அது இல்லை
தீர்க்க முடிவே வலியே?

Author:

ராணி சம்பந்தர் மார்கழியில் தொங்கிய திங்கள் ஊர் கழிப்பில் தங்கிய சந்திரன் சொந்தக்காரப் பங்கழிப்பன்றோ சிறுவரில் தூங்க அம்புலிமாமியே சிவப்பு...

Continue reading