“மூப்பு வந்தாலே”

நேவிஸ் பிலிப் கவி இல (501)

மூப்பு என்பது மனித வாழ்வில்
இறைவன் தந்த வரம்
இறுதிக்காலம் யாருக்கும்
எப்போதும் வரலாம்
ஆனால்

திடீரென் வருவதல்ல மூப்பு
ஒழுங்கமைந்த வாழ்வில்
பதற்றமின்றி சீராக
எம்மை வந்தடைவது

கால ஓட்டத்திலே
ஆதங்கமுடன் அல்லலுற்றாலும்
முழுமையாய் எம்மை
ஆரத் தழுவிக் கொள்வது

அன்பின் அர்த்தங்களை அறிந்து
புரிந்து பகிர்ந்தும், ஆற்றாமையின்
முக்கல் முனங்கல்களை தாங்கியும்
நிதானமாய் வருவது

வேரின் மணம் போல
குணம்தனை இழக்காது
தற்செயலாய் வந்து
திடுக்கிடவும் வைக்காது

பொறுமையின் நிறைவில்
முற்றிய கனிபோல
கருணையின் விதைகளை
தன்னகத்தே தாங்கி நிற்பதே முதுமை
நன்றி.

Author:

ராணி சம்பந்தர் மார்கழியில் தொங்கிய திங்கள் ஊர் கழிப்பில் தங்கிய சந்திரன் சொந்தக்காரப் பங்கழிப்பன்றோ சிறுவரில் தூங்க அம்புலிமாமியே சிவப்பு...

Continue reading