மூப்பு வந்தாலே…

வசந்தா ஜெகதீசன்
மூப்பு வந்தாலே ….
அறிவாற்றல் முதிர்கின்ற அனுபவத்தின் பிழிவு
பட்டறிவின் தெளிவோடு பயணிக்கும் மூப்பு
விட்டகலா பாசமும் பரிவோடும் உறவு
பற்றகலா பல பணியில் சுற்றிடுமே நினைவு
முதுமை என்னும் சுழல் வானம்
முற்றுபுள்ளி தேடும்
மூப்பு எனும் தளர்ச்சியிலே உபாதைகளே நீளும்
அறிவாற்றல் மங்கிடவே அதிதுயரே வாழ்வு
உடல்வலுவும் ஒடுங்கி விட
ஊசாட்டம் குன்றும்
யார் வரவை எதிர்பார்த்தே ஏங்கிடுமே மனசு
போர் மேகச்சூழல் போல் பொழுதுகளே கணதி
மூப்புநிலை வந்தாலே முடங்குவதே நியதி
தள்ளாடும் பொழுதுகளில்
தாங்கி நிற்கும் உறவோர்
தக்கதுணை தந்துநிற்கும்
தைரியத்தின் வேர்கள்
வீழ்தலின்றி வாழ்ந்திடவே
விழுதாகத் தாங்கு!
நன்றி
மிக்கநன்றி

Author:

ராணி சம்பந்தர் மார்கழியில் தொங்கிய திங்கள் ஊர் கழிப்பில் தங்கிய சந்திரன் சொந்தக்காரப் பங்கழிப்பன்றோ சிறுவரில் தூங்க அம்புலிமாமியே சிவப்பு...

Continue reading