இயற்கை வரமே, இதுவும் கொடையே 73

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
16-10-2025

இயற்கை வரமே, இதுவும் கொடையே
இவற்றை புரிந்தால் வாழ்வும் நிறைவே
இலவசக் காற்று சுவாசத்தின் சிறப்பே
இம் மண்ணின் பசுமை பெரு வரமே!

விடியலில் செங்கதிரோன் வருகையும்
விடியாத இரவின் அமைதியும்
வண்ணப் பூக்களின் வாசனையும்
வானம்பாடிகளின் இசையும்

காலம் தந்திட்ட தாய்மை இவையே
கண்ணாய் காத்திடல் வேண்டுமே
அழித்திட நினைக்கும் மனிதனுக்கு,
அறிவை புகட்டிட வேண்டாமோ??

இயற்கை வரமே, இதுவும் கொடையே
இவற்றை பேணுவது எம் கடமையே
எதிர்காலத் தலைமுறை நோக்கியே
உலகையே சோலையாக்குவோம்.

Jeba Sri
Author: Jeba Sri