“அமைதிப்பூங்கா”

நேவிஸ் பிலிப் கவி இல(517)

பனி விழும் மலர் வனம்
பளிங்கு கல் பதித்த கல்லறைகள்
எரிகின்ற திரிகளும் வண்ண மலர்களோடு
வாசம் தரும் ஊதுபத்திகளும்

உள்ளிருப்போர் யாரோ எவரோ
நாமறியோம் தேடுகிறோம் எங்கே
எம்மோடு வாழ்ந்தோர் எங்கேயெனத்
தேடுகிறோம்

பாலூட்டி வளர்த்த அன்னையை
தோளிலே தூக்கிய தந்தை
உடன் பிறந்தரையும்
தேடுகின்றோம்

அரவணைத்த மூத்தோரையும்
அறிவுக் கண் திறந்தோரையும்
கூடிக் களித்த தோழர்களயும்
தேடுகிறோம்

சிலுவையில் காட்டும் இயேசு
இதோ இங்கே
நிலையில்லா உலகில்
இது ஒன்றே நிசம் என்கிறார்
அமைதியாய்
நன்றி…

Author:

பூக்கட்டும் 116 ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 29-09-2026 யுத்தங்கள் தகர்ந்திங்கு மொத்தமாய் சந்தோஷம் பிறக்கட்டும் கண்ணீர் நனைந்த மண்ணினிலே கனவுகள்...

Continue reading

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

Continue reading