“முதல்ஒலி”

நேவிஸ் பிலிப் கவி இல(521)

பிரபஞ்சத்திலோர் பிரசவம்
வானலையில் தவழ்நது
காதோரம் நுழைந்து
தமிழால் இசை பாடிய
முதல் ஒலி
இலண்டன் தமிழ் வானொலி

சூரியோதயமாம் சன்றையிஸ்
தமிழ் செய்திகளால் மனம் கவர்ந்து
முப்பத்தேழு ஆண்டுகள் தொடர்ந்து
பவனி வந்த பெருமிதம்

நெஞ்சத் திறனுடன் நேர் கொண்ட
எண்ணங்களை செயலாக்கிட
மண்ணுழுது விதை தூவி
பயிர் வளர்க்கும். விவசாயியாய்

தீரமும் ஓர்மையும் நேர்மையுமாய்
ஒன்றிணைந்த இணகளாய் மகளுடன்
தன்னலமற்ற சேவையாற்றி
இன்று மிளிர்கின்ற பாமுகமும்

சன்றையிஸின் பட்டொளியில்
எட்டுத்திக்கும் பரவி பார் போற்ற
வளரந்திடவே வாழ்த்துகிறோம்
மனமுவந்து வாழ்கவே நிரந்தரமாய். வாழி.
நன்றி…….

Author:

ராணி சம்பந்தர் மார்கழியில் தொங்கிய திங்கள் ஊர் கழிப்பில் தங்கிய சந்திரன் சொந்தக்காரப் பங்கழிப்பன்றோ சிறுவரில் தூங்க அம்புலிமாமியே சிவப்பு...

Continue reading