முதல் ஒலித்தடமே

இரா .விஜயகௌரி
முனைப்புடன் எழுந்த மொழியின் வலம்
மூத்தவள் உனக்கே உலகின் தடம்
ஆண்டுகள் மூ பத்தாறினைத் தொட்டெழுந்து
வீரிய நடையின் வீச்செறிந்தாய்

புலம் பெயர் வாழ்வின் சரித்த்திலே
மொழியொடு இதயங்கள் விரிந்தெழவே
அன்றவள் எழுந்தாள் உதயம் கண்டாள்
சூரிய உதயத்தை மொழியில் தந்தாள்

கனலொடு தமிழின் உராய்வுகளை
கணித்தவள் நிலைத்தனள் வான் ஒலியாய்
நித்திய முனைப்பு கொண்டவர் தாம்
ஏந்திய பெருந்தடம் நடப்பினிலே

ஆளுமை நிறைத்தவர் பலரிணைய
அணிவகுத்தனர் தாம் நடா மோகன் அவர் தம்முடனே
நீடிய பயணம் சரிதமென -இன்று
நிலைத்தது முதல் தடம் திகழ

Author:

ராணி சம்பந்தர் ஆறறிவு படைத்த மாந்தரில் பொங்கிடும் பல உணர்வுப் பொறியில் சிக்கி ஐந்தறிவு புடைத்த மிருகம் ஆக்கிடுமே அறிவில்...

Continue reading

வசந்தா ஜெகதீசன் இனிவரும் காலம்--- தொன்மை மறைந்திடும் தொழில்நுட்பம் வளர்ந்திடும் தொடரும் வாழ்வில் சிக்கல்கள் செதுக்கலாய்...

Continue reading