இயற்கை அனர்த்தம்

இயற்கை அனர்த்தம்

இயற்கை அனர்த்தம் தாய்நிலத்தில்
இடர்கள் நிறைந்த காலகட்டம்
பயத்தால் மக்கள் பாதிப்பே
பருவ மழையே நிற்காயோ?
துயரம் சூழ்ந்த வாழ்க்கையிது
தொல்லை விட்டு நீங்காதோ?
நெஞ்சை அள்ளும் துன்பவலை
நேர்மை அற்ற இயற்கையிடர்
தஞ்சம் புகுந்த மக்களுக்கும்
தண்ணீர் இன்றி அவதியிடர்
பஞ்சம் இன்று தலைவிரிப்பு
பாரில் இன்று பட்டினியே

மாண்டார் பலரும் அவலத்தில்
மக்கள் ஏங்கும் அவலக்குரல்
சிலரிங்கே
மீண்டு வரவே மக்களுக்கு
மீட்கும் உதவி செய்திடுவோம்
நகுலா சிவநாதன் 1832

Author:

ராணி சம்பந்தர் மார்கழியில் தொங்கிய திங்கள் ஊர் கழிப்பில் தங்கிய சந்திரன் சொந்தக்காரப் பங்கழிப்பன்றோ சிறுவரில் தூங்க அம்புலிமாமியே சிவப்பு...

Continue reading