” புயலின் கோரத் தாண்டவம் “

ரஜனி அன்ரன் (B.A)”புயலின் கோரத் தாண்டவம் 04.12.2025

இதயம் குலைநடுங்க பலத்தமழை
இடியும்புயலும் கோரமாய்தாக்க
இருளும் மழையும் கலந்த வானின்கோலம்
இரும்பு வேகமெடுத்த காற்றின் வீரியத்தாண்டவம்
உலுக்கியது மக்களை காவுகொண்டது உயிர்களை
நானூறு பேருக்குமேல்பலி கிராமமே காலியாச்சு
புயலின் கோரத்தாண்டவம் தந்தது பேரழிவை !

பேய்க்காற்று முறித்தது மரங்களை
சிதைத்து விட்டது மனங்களை
ஊரையே உலுக்கி உடமையைச் சுருட்டி
உயிரினைக் குடித்து ஏப்பமும் விட்டது
மடிதாங்கிய மண்ணே
இடியாகித் தீராப்பசி கொண்டு
இழுத்துச் சென்றதே பாதாளத்திற்கு !

வீடுகளெல்லாம் கூடுகளாச்சு
வீட்டின்கூரைகள் கூறுகளாச்சு
மானிடமெல்லாம் மண்ணுக்கு இரையாச்சு
நாட்டினைப் புரட்டிப்போட்ட பினாமியால்
நாடே சோகமாச்சு !

செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

Continue reading