நகைப்பானதே மனித நேயம் -2127 ஜெயா நடேசன்

நகைப்பானதே மனித நேயம் -2127 ஜெயா நடேசன்
மனித நேயம் என்றாலே
வாட்டும் நெஞ்சுகள் வளமாக
ஆற்றும் செயல்பாடுகள்
புனிதம் பெறவே மனிதநேயம்
இயற்கை அன்னை சீற்றத்தால்
பெருகியது மழையும் வெள்ளமும்
பொங்கியது கடலும் கொந்தளிப்பும்
மனித நேயமும் சேர்ந்துதானே
கொள்கைகளோ மனதை உருக்குதே
எண்ணித் துணிக கரும செயல்கள்
மண்ணில் மனித நேயப் பண்பாடே
பதவிக்கும் சுகபோக வாழ்வுக்கும்
தடம் மாறுவோர்கள் பலதுமாய்
தலை சார்ந்தது தன்மானமற்ற செயலே
தற்போதைய அரசு ஆரோக்கியமானதே
அரசியல் செயல்பாடுகள் நீதியாகினால்
தேசம் வளமாய் உயிர் பெற்றிடுமே

Author:

ராணி சம்பந்தர் மார்கழியில் தொங்கிய திங்கள் ஊர் கழிப்பில் தங்கிய சந்திரன் சொந்தக்காரப் பங்கழிப்பன்றோ சிறுவரில் தூங்க அம்புலிமாமியே சிவப்பு...

Continue reading