மனிதநேயம்

ராணி சம்பந்தர்

மண்ணில் அடங்கும் மானிடரில்
கண்ணிலின்று ஈரமில்லை என
எண்ணிய மனிதநேயம் கூனிக்-
குறுகியே கண்ணீர் சொரியுது

நாடுவோரில் இரக்கமே குறைய
வாடுவோரில் அன்பு மறையவே
தேடுவோரில் துன்பமும் கூடிடவே
கூடுபவரின் உதவிக்கரம் பொரிய

பலனை எதிர் பாராத பணிகளோ
தன்னலனில் வெளிவேஷம் புரிய
ஐம்புலன்களோ சிற்றின்பம் நாட
பணமூட்டை மூலதனம் முறிகிறது

சுயநலம் தன்னலம் அணிந்திடவே
பகட்டு ,புகழ் ,பொய்பிரட்டுத் திரட்டி
ஆலம் விதையா விருட்ஷமாகிறது
மனிதம் குறைந்து வேட்கை ஆகிட
மனிதநேயம் சிறகொடிந்தாய்த்
திரிகிறது .

Author:

ராணி சம்பந்தர் மார்கழியில் தொங்கிய திங்கள் ஊர் கழிப்பில் தங்கிய சந்திரன் சொந்தக்காரப் பங்கழிப்பன்றோ சிறுவரில் தூங்க அம்புலிமாமியே சிவப்பு...

Continue reading