பொங்குவாய்

ராணி சம்பந்தர்

பருவக் காலப் பாதிப்பிலே
பங்கு கண்டு பொங்குவாய்
உருவக் கோலச் சாதிப்பிலே
முங்கியபடியே மொங்குவாய்

கரும வினை தீரத் துதியிலே
பொங்கி உண்டு வணங்கிய
மாந்தரை வாங்கு வாங்கென
நீண்ட தூரம் நாண்டு கொண்டு
துரத்தித் துரத்தியே நீங்குவாய்

வருடம் முடியுதெனப் போதித்து
மங்கிய புகாரும் தேங்கிய நீர்
வெள்ளமும் அடிக்கிற புயலின்
பெருங் காற்றும் சுழன்றிடவே
மூண்டு மூண்டே தங்குவாய்

இரவு பகல் பயந்து விடியாது
அனங்கியே தூங்காது பசிக்
கொடுமை தாங்காது புசிக்க
எதுவுமின்றிக் குடிக்க நீரின்றி
சமைக்க விறகின்றித் தவிக்க
கலைத்துக் கலைத்து நீயோ
பொங்குவாய் .

Author:

ராணி சம்பந்தர் பருவக் காலப் பாதிப்பிலே பங்கு கண்டு பொங்குவாய் உருவக் கோலச் சாதிப்பிலே முங்கியபடியே மொங்குவாய் கரும வினை...

Continue reading

சிவாஜினி சிறிதரன் சந்தகவி இலக்கம் _216 "பொங்குவாய்" தை திங்கள் வந்ததடி தோழி தரணிமெல்ல மகிழ்ந்தடி ஆதவனார் வந்தாரடி! பொங்கலிட்டோம் பூஜை...

Continue reading