தன்னம்பிக்கை 82

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 22-01-2026 சுற்றியிருக்கும் இருள் சூறையாட நினைத்தால் துணிவெனும் தீச்சுவாலை கொழுந்து விட்டெரியட்டும்! விழுந்தால் எழுவாய் விதிதனை வெல்வாய் விடியும்...

Continue reading

தன்னம்பிக்கை 82

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
22-01-2026

சுற்றியிருக்கும் இருள்
சூறையாட நினைத்தால்
துணிவெனும் தீச்சுவாலை
கொழுந்து விட்டெரியட்டும்!

விழுந்தால் எழுவாய்
விதிதனை வெல்வாய்
விடியும் என்றே
வலிதனை முகிழ்வாய்

கால்கள் சோர்ந்தால்
கனவுகளைத் துணையாக்கு
கண்ணீர் வழிந்தால்
கடமையை நினைவாக்கு

இடி விழும் வேளையிலும்
இதயத்தின் பிடி தளராதே
தன்னம்பிக்கை ஒளி கண்டு
தளர்ந்திடுமே துயர் நிழல்

Jeba Sri
Author: Jeba Sri

ராணி சம்பந்தர் மார்கழியில் தொங்கிய திங்கள் ஊர் கழிப்பில் தங்கிய சந்திரன் சொந்தக்காரப் பங்கழிப்பன்றோ சிறுவரில் தூங்க அம்புலிமாமியே சிவப்பு...

Continue reading