சிறகடிக்கும் நினைவலைகள்

இரா.விஜயகௌரி சிந்தனைச் சுழல் விரிய செம்மையுறும் எழில் பொழிய விந்தையென நினைவில் எழும் வீரியத்தின் சுந்தரங்கள் எந்தையும் தாயும் இணை கனவெழுதும்...

Continue reading

நெருப்பு நினைவுகள்…..

ரஜனி அன்ரன்(B.A) நெருப்பு நினைவுகள்.. 23.07.2026 இன்றையநாள் யூலை இருபத்திமூன்று அன்றைய கறுப்புயூலையின் நெருப்புநினைவுகள் கனதியாய்...

Continue reading

“நிழலாடுதே நினைவாயிரம்”

நேவிஸ் பிலிப்
கவி இல 558

நெஞ்சில் வரைந்த வண்ணங்களாய்
வெஞ்சினம் அறியா பிஞ்சு வயதினிலே
கஞ்சத்தனமில்லா அன்பினை நிதம் சுவைத்து
கொஞ்சி மகிழ்ந்தன கரங்களில் பொம்மைகள்

சோலையிலாடும் மலரிடையே
இலைகளில் மறையும் பட்டாம் பூச்சியதை
விழுந்து பிடித்தே பறக்க விட்ட
நினைவுகள் இன்னும் நிழலாடுதே

கடலோர மணலிலாடி
தடம் பதித்தும் அழித்தும் விளையாடி
உடல் சிலிர்க்க மனமினிக்க
உணர்வினில் கலந்த நாட்கள் மறந்திடுமோ

கற்றிடும் பாடங்கள் நடுவேயும்
கேலியும் கூத்தும் களை கட்டும்
நாட்டிய நாடகம் அரங்கேறும்
மனதினில் மகிழ்ச்சி குடியேறும்

காலங்கள் கடந்தாலும் இன்றும்
நினைவினிலாடுதே நினைவாயிரம்
நிறைவேறா ஆசைகள் எத்தனையோ
அத்தனையும் நெஞ்சுக்குள்ளே
பொதிந்துள்ளேன் பொக்கிசமாய்
சொல்ல இன்னும் ஏராளம்
சங்கதிகள் இருக்கு தாராளம்
நன்றி………….

Author: