நிழலாடுதே நினைவாயிரம்

நிழலாடுதே நினைவாயிரம்
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ

களமாடுதே எண்ணங்கள் கருத்தாய் மின்னலிட

வளமான நின்ற காலங்கள் எங்கே

நலமான வாழ்வுகள் நலிந்தே போகவும்

திடமான நினைவுகள் திடமின்றி நிழலாடியது

வடமிழுக்க தேர்வரும் வசப்படும் ஊர்வலம்

இடமினிக்க வாழ்ந்த நாளெல்லாம் ஆயிரம்

தடம்பதித்த நேரத்தின் தரமே உயர்ந்தது

படம்முடிந்து போனது போன்றதே இன்றையநிலைகள்

சரித்திரமாய் வாழ்ந்தவர் கோடி கேளாய்

பெளத்திரமாய் மேம்பட்ட மனிதர்கள் நேயமும்

விசித்திரமாய் வாழ்வதில் பெருமை காணவே

பழைசை நினைச்சேன் பதறுதே நெஞ்சமும்

சர்வேஸ்வரி சிவரூபன்

Author:

ராணி சம்பந்தர் மார்கழியில் தொங்கிய திங்கள் ஊர் கழிப்பில் தங்கிய சந்திரன் சொந்தக்காரப் பங்கழிப்பன்றோ சிறுவரில் தூங்க அம்புலிமாமியே சிவப்பு...

Continue reading