மதத்தை மறந்த மனிதன்

மதத்தின் ஒளி இதயத்தில் பிரகாசித்ததே 
மனிதன் பாதை தெளிந்தே தெரிந்ததே 
ஆனாலின்று அவன் நம்பிக்கை சரிந்ததே 
மாயையின் நிழல் முன்னாடி விரிந்ததே 

அறிவின் உயரம் தொட்டே சிறந்தான் 
ஆன்மாவின் ஆழம் குறைந்ததை மறந்தான் 
உறவுகள் எல்லாம் விலகி நிற்கின்றது 
தனிமைக்குள் அவன் வாழ்க்கை தத்தளிக்கின்றது 

பொன் குவித்தான், புகழ் தேடினான்
பொய்யான சிரிப்பில் வாழ்க்கையை அமைத்தான் 
மன்னிப்பு என்பதை அடியோடு மறந்தான் 
கடினமாக மனத்தை மனிதன் மாற்றிவிட்டான் 

மதத்தை மறந்த மனிதன் கூட
மறுபடியும் ஒளியை காணலாம்
ஒரு சிறு அன்பு செயல் போதும்
அன்றோடு வாழ்க்கை புதியதாகும் 

நின்று சிந்தி நான் யாரென
உன்னையே நீ கேள்
இறைவனை அறிவாய்

ஜெயம்
16-04-2026

Author:

ராணி சம்பந்தர் வாழ்த்துகள் விதம்விதம் ஒவ்வொன்றும் பதந்தரும் அவ்வப்போ அள்ளி வீசும் சொற்களில் அர்த்தங்கள் நேசமுடன் பொங்கிடுமே திருமணம் ,தீபாவளி ,...

Continue reading

செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

Continue reading