தொழிலாளர் கவிதை 798 (1)

ஜெயம்
வியர்வையால் வாழ்க்கையை செய்யும் மனிதர்
வெய்யிலையும் மழையையும் பொருட்டாக நினையார்
அவரின்றி உலகம் நகராது இங்கு
அவரின்றி உயிர்கள் வளர்வதுதான் எங்கு

வியர்வை துளிகளால் பூமியை நனைத்தார்
உயர்ந்து வானத்து எல்லைகளை கடந்தார்
வாழ்க்கையின் விதைகளை நாள்தோறும் விதைத்தார்
வாழ்நாள் சாதனையாளராக அவனியில் திகழ்ந்தார்

கல்லும் முள்ளும் அவர் கதையெழுதும்
மண்ணும் விண்ணும் அவர் உழைப்பறியும்
பசியை மறந்து பணியை நேசிப்பார்
மௌனத்தால் தன் வலியெல்லாம் மறைப்பார்

பூக்கட்டும் 116 ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 29-09-2026 யுத்தங்கள் தகர்ந்திங்கு மொத்தமாய் சந்தோஷம் பிறக்கட்டும் கண்ணீர் நனைந்த மண்ணினிலே கனவுகள்...

Continue reading