பெருவலி சுமந்த பேரிடர்……

ரஜனி அன்ரன் (B.A)...பெருவலி சுமந்த பேரிடர்.. 14.05.2026 மேபதினெட்டு மேதினியின் கரிநாள் பெருவலிசுமந்த கண்ணீரின் காவியநாள் வெறும்...

Continue reading

இழப்புக்கள்

குமரன்
இழப்புக்கள்
வாரம் 355
விருப்ப தலைப்பு

வருடத்தில். ஒரு
நாள்
வந்திடும் நினைவு நாள்
இழப்பின்
வலிகளை சுமந்திடும் மனங்களின்
வருடங்களை எண்ண
அவரவர் உறவுகள்
மீண்டுட முடியா
பிரிவுகளை மறந்திட
மாற்று வழியும் உண்டோ!

காலங்கள் நிகழ்வினை
மறந்திடும்
காப்பவர் உள்ளத்தில்
கலக்கம் என்றும்
நிலைத்திடும்
வழி வழி சந்ததிக்கு
வாய் வழி சென்றிடும்…