முயற்சியே பலம் முனைப்பே திடம் 91

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
21-05-2026

மனதில் உறுதி மாண்புறக் கொண்டு
தினமும் உழைப்பவர் தீரர்கள் தாமே
எழுந்து நீ ஏற்றமானாலும் விதியோ
வீழ்த்திடப் பார்க்கும் விழிப்பாய் இருநீ

கதி கலங்காத காரிகை யாகவே
மதி நுட்பத்தோடு முன்னேறு வாயே
தளர்விலா நெஞ்சம் தனியொரு பலமாய்
மிளர்வாய் என்றும் இவ்உலகு மீதே

தடைகள் வந்தாலும் தளர்ந் தெழு
விடைகள் வருமே வரமாய் உனக்கே
முயற்சியே பலமென முனைப்பே திடமென
முயன்றிடின் வையகம் வசப்படும் கையிடமே.

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் கோடை கோடை வந்தாலே கடற்கரை மோகம் வாடை என்றாலும் எடுக்குதே தாகம் ஆடை மாற்றமும் பலரது தேகம் ஜாடை காட்டியே பூக்களின்...

Continue reading

சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

Continue reading