திசை மாறும் திருப்பங்கள்…….

இரா விஜயகௌரி பிறக்கும் போதே இறப்பெழுதி இறப்பை மறுத்து மறந்தே வாழ்வெழுதி உருண்டு ஓடும் தினங்களுள்ளே உளைச்சலில் உழலும்...

Continue reading

அனலாய் வெப்பம்

நகுலா சிவநாதன்
அனலாய் வெப்பம்

அனலாய் வெப்பம் அடிக்குது தினமும்
அகத்திலே சூடும் கூடுது நிதமும்
மனமும் சோர்வாய் மயக்கும் வெயிலில்
கணமும் தாக்கம் கதிரின் விளைவாய்

எல்லையில்லா வறட்சி எங்கும்
எகிறுது வெப்பம் ஏற்றமாய் நாளும்
தொல்லை இங்கு புழுக்கமாய் உடலும்
தொடருது தாக்கம் புவியதன் மேலே

கோடையின் தாக்கும் கொதிநிலை கொண்டு
வாடையைத் தேடுது மனமும் நின்று
வரலாறு காணா வரட்சி போக்கு
வாடுது உடலை வண்ணமாய் நின்று!!

நகுலா சிவநாதன் 1860

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் கோடை கோடை வந்தாலே கடற்கரை மோகம் வாடை என்றாலும் எடுக்குதே தாகம் ஆடை மாற்றமும் பலரது தேகம் ஜாடை காட்டியே பூக்களின்...

Continue reading

சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

Continue reading