25
Jun
இரா விஜயகௌரி
பிறக்கும் போதே இறப்பெழுதி
இறப்பை மறுத்து மறந்தே வாழ்வெழுதி
உருண்டு ஓடும் தினங்களுள்ளே
உளைச்சலில் உழலும்...
25
Jun
அனல் வெப்பம்……
ரஜனி அன்ரன் (B.A)...அனல் வெப்பம்... 25.06.2026
வாட்டுதுவெப்பம் அனலாக வாடுதுமனசும் தணலாக
வானத்துப்...
25
Jun
“முகங்கள்”
நேவிஸ் பிலிப் கவி இல (624)
ஞாலத்திலே பவனி வரும்
உற்சாக முகங்கள் ஏராளமாய்
அன்போடு...
அனல் வெப்பம்……
ரஜனி அன்ரன் (B.A)…அனல் வெப்பம்… 25.06.2026
வாட்டுதுவெப்பம் அனலாக வாடுதுமனசும் தணலாக
வானத்துப் பகலவனும் வஞ்சம் கொண்டானோ?
பூமியின்மீது நெருப்பை அள்ளிவீச
பூமித்தாயும் தவிக்கிறாளே தாகத்தாலே
காற்றோ அனலாய்வீச சூட்டினை ஏற்றுது தேகமும் !
சூரியன் உமிழுது நெருப்புக்கோளம்
சுட்டெரிக்குதே இந்த அவனியும்
மரங்களை வெட்டிய மனிதனின் பாவம்
இன்று வெப்பமாய் மாறிய சாபம்
காற்றிலும்வீசுது அனலின்வீச்சு
வாடிப்போகுதே எம்மூச்சும்
நிழல்தேடி நீர்நிலைகள்நாடி அலையுது மானிடமும் !
அல்ப்ஸ் மலைகளோ பனியுருகிக் கண்ணீர்வடிக்க
ஐரோப்பிய தெருக்களெல்லாம் அனல்காற்றடிக்க
குளிர்தேசத்து வீதிகளெல்லாம் கொதிக்கிறதே
பருத்தி ஆடைகள்கூட பாரமாய்மாற
பனிக்கட்டி தேசமும் வியர்வையில் நீராடுதே !
Author: ரஜனி அன்ரன்
24
Jun
செல்வி நித்தியானந்தன் கோடை
கோடை வந்தாலே
கடற்கரை மோகம்
வாடை என்றாலும்
எடுக்குதே தாகம்
ஆடை மாற்றமும்
பலரது தேகம்
ஜாடை காட்டியே
பூக்களின்...
23
Jun
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
23-06-2026
விடியல் இல்லையென முடங்கினால்
வெளிச்சம் எப்போ வெளிவரும்?
பாறையில் மோதிவரும் அலையாய்
பயணத்தை...
20
Jun
சிவாஜினி
சிறிதரன்
கவி இல_ 237
"வெற்றி"
உழைப்பை உரமாக்கி
முயற்சியை
மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி
முயலும் உன்னை முந்தாது!
அடைய வேண்டிய...