எதிர் கால ஏக்கம்

ராணி சம்பந்தர்

அன்றாடம் மனதில் சூளும்
வினாவிற்கு விடை தேடியே
மூளை பிச்சுப் பிடுங்கிடவே
தலையோ சுற்றுகிறதே

இன அழிப்போ பாளுங்
கிணற்றில் விழுந்து மூள்கி
நெடுங்காலம் பதிலின்றியே
மூலைக்கு மூலை தூற்றிடுதே

கனத்த இதயமுடன் ஏதிலியாய்
நாம் அகதி மண் தஞ்சம் புகுந்து
நாளுக்குநாள் போர் தூக்குதே

வல்லரசின் காலைச் சுற்றிவரும்
வால்களும் கூட்டுச்சேர இடி –
முழக்கமுடன் வண்டவாளங்கள்
கொட்டி ஏதோ பிதற்றுகிறதே

இயற்கை கூட இத் தாக்கமதைத்
தாங்கா அதி வெப்பம் கொழுத்தி
அனல் கக்கிட பசுமை எரித்துத்
தன் எதிர்கால ஏக்கமதிலே
எரிச்சலைக் காட்டி நிற்கிறதே .

Nada Mohan
Author: Nada Mohan

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

Continue reading

செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

Continue reading