நியதி…

வசந்தா ஜெகதீசன்
நியதி..
வரம்பு நிறைந்த வாழ்வியல்
வற்றாத சுரங்கமே உலகியல்
எதற்கும் உள்ளது நியதியே
எங்கும் வாழ்வது தகுதியே
இயற்கை கொடையே பெருவரம்
இல்லாது போயின் எது வரும்
உதயத்தின் சூரியன் பெருங்கொடை
உலகையே இயக்கிடும் நன்கொடை
நியதியின் வரம்பே நிறுத்தற்புள்ளி
நீங்களும் நாங்களும் சுழற்சிப்புள்ளி
சம்பவத் திரட்டுக்கள் சான்றுகளாய்
சராசரி வாழ்வின் விம்பங்களாய்
நியமிக்கும் நிர்ப்பந்தம் உடன்படிக்கை
நீந்தியே கடப்போம் நியதிப்படி
நிமிர்வும் தாழ்வும் விதியின் வழி.
நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

Continue reading

செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

Continue reading