மாறியதே வாழ்க்கை…

வியாழன் கவி-2369

மாறியதே வாழ்க்கை..!!

கல்வி கற்கும் இளமை
காரியம் ஆற்றும் தகைமை
திருமண பந்த இணைவு
நாடு தாண்டிய இருப்பு
மாறியதே நம் வாழ்க்கை..

வேற்று மொழி சேர்க்கை
வேறுபட்ட மனித முகங்கள்
மாறி வந்த இருப்பிடம்
மாற்றந்தந்து போனது
அதுவே பழகியும் விட்டது..

பாமுகத்து அழைப்பது
பற்பல உயர்வு தந்தது
புலம் பெயர் தேசத்தில்
பலமதை கை சேர்த்தது
காலம் மாற்றியது வாழ்வை..
சிவதர்சனி இரா
16/7/2026

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

Continue reading

சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

Continue reading