மாறியதே வாழ்வு…

வசந்தா ஜெகதீசன் மாறியதே வாழ்வு... தினம் தினமாய் திசைமாறும் திருப்பங்கள் பலவாகும் ஆறெனும் நதியோட்டம் அனுதினமும் பெருமன்றம் கூறுபடும் குழப்பங்கள் குறுகி வரும்...

Continue reading

உருண்டோடிய பந்து வாகைசூடிய மகிமை

செல்வி நித்தியானந்தன் (771) உருண்டோடிய பந்து வாகைசூடிய மகிமை கோடிக்கணக்கான ரசிகர்களை ஈர்த்தும் கோலாகலமாக...

Continue reading

மாறியதே வாழ்வு…

வசந்தா ஜெகதீசன்
மாறியதே வாழ்வு…
தினம் தினமாய் திசைமாறும்
திருப்பங்கள் பலவாகும்
ஆறெனும் நதியோட்டம்
அனுதினமும் பெருமன்றம்
கூறுபடும் குழப்பங்கள்
குறுகி வரும் தொடர்புகள்
மாறுபடும் மனங்களின்
மறுதலிப்பே ஏராளம்
அன்றைய அணுகுமுறை
அனைத்துமே குழப்பநிலை
பண்பாடு கலாச்சாரம் பாரம்பரியமென
பலதிலே பாதையிட்டு
பண்பாட்டைச் சீர்குலைத்து
நம் வாழ்வே நலிகிறது
நாளும் தளர்வடைகிறது
மதிநுட்பத் திறன் குன்றி
தொழில்நுட்ப திறன் விஞ்சி
மாறியதே வாழ்வு மதி குன்றும் தேர்வு!
நன்றி

Nada Mohan
Author: Nada Mohan