சுமை 93

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
16-06-26

உழைக்கும் கைகளின் சுமையே
இலக்கை எட்டுகையில் சுகமே
நினைக்க இனிக்கிறது தினமே
நிழலாய் உன் பிள்ளை வருமே..

சீதணக் காணியில் சீராய்ப் போன
சின்ன குடும்ப மொன்று -மேலவர
வெளிநாடு அனுப்பி வெறும் கை
வந்த கதை கண்ணீராய்ப் பெருகுதே

தாக மெடுக்கும் நேர மெல்லாம் தண்ணி அடித்து தான் அழிந்து
போதை பல குடித்து -அவன்
பேதைக் கதை கேட்க கலங்குதே…

ஆணவத்தில் அலைந்தவன் அடிமை
உடலை உருக்கி நரம்பில் ஊடுருவி
மாயையில் விழித்து பாதை மாற்றி
மீள்வதே வெற்றி சுமை இறக்கி!

Jeba Sri
Author: Jeba Sri

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

Continue reading

செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

Continue reading