முயற்சி தரும் பயிற்சி…

வசந்தா ஜெகதீசன் முயற்சி தரும் பயிற்சி... அயராத முயற்சியில் அர்ப்பணமாகும் அனுதினப் பயிற்சியே அனைத்தையும் ஆளும் கண்ணின் விழியில்...

Continue reading

“முயற்சி தரும் பயிற்சி”

நேவிஸ் பிலிப் கவி இல(643)

வாழ்வில் முடியாதது என்று
எதுவுமில்லை
முயற்சி இன்றி பயிற்சி
என்றும் வென்றதில்லை

பட்டுப் புழு கூடுடைத்து
பட்டாம் பூச்சி பறப்பது போல
பாதை வகுத்து நாம் முயன்றால்
பாருலகை வென்றிடலாம்

நம்பிக்கை என்னும் குழி பறித்து
பயிற்சி என்னும் செடி நட்டு
உழைப்பென்னும் உரமிட்டு
துணிவென்னும் நீர் பாய்ச்சி

உயர்ச்சி காண அயரச்சி நீக்கி
தளர்ச்சியின்றி பயிற்ச்சி செய்து
சாதனை என்னும் மரம் வளரத்து
விடா முயற்சி என்னும்ஏணியில் ஏறி
வெற்றிக் கனி பறித்திடலாம்

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

Continue reading