27
Aug
சக்தி சிறினிசங்கர்
சரியும் தவறும் கலந்தது வாழ்க்கை
கரிசனை வேண்டும் கனியது காண
மழையாய் புயலாய் மிடிகள்...
27
Aug
அழகின் மகிமை
நகுலா சிவநாதன்
அழகின் மகிமை
பசுமை போர்த்திய மலைகளிலே
பனித்துளி பேசும் பாலி…
நீலக் கடல் அலைகளிலே
நிலவொளி...
27
Aug
வெயில் காலம்
இல 93
வெயில் காலம்
பச்சை புற்களும் பச்சை மரங்களும் வரண்டு காய்ந்து...
முயற்சி உயர்ச்சியின் மூலதனம்
சக்தி சிறினிசங்கர்
சரியும் தவறும் கலந்தது வாழ்க்கை
கரிசனை வேண்டும் கனியது காண
மழையாய் புயலாய் மிடிகள் இடியாய்
உளைச்சல் தந்து உரசிடும் வேதனை
அழியா மனத்திடம் அறிவும் செயலும்
எழிலாய் மலரும் என்றும் வாழ்வு
தோல்வியை ஏற்று தொடர்நடை போடக்
கால்கள் ஊன்றிக் கடக்கணும் தடைகளை
உடைத்து வாழ்வில் உயர்ந்திட என்றுமே
இடைவிடா முயற்சியில் இமயம் தொடலாம்
சிலையை வடிக்கும் சிற்பியின் முயற்சி
வலையைப் பின்னும் சிலந்தியின் முயற்சி
திருவினை ஆக்கும் திண்ணமே உணர்வாய்
ஒருமுறை அல்லப் பலமுறை சிந்தி
ஓய்ந்து போகாது ஆர்வம் கொண்டே
மாய்ந்து மாய்ந்து முயற்சி செய்தால்
ஆய்ந்து கொள்ளலாம் வெற்றிக் கனியை!
Author: Nada Mohan
12
Aug
செல்வி நித்தியானந்தன்
குதூகலம்
கோடை வந்தாலே
கொண்டாட்டம்வந்திட
ஆடையும் மாறியே
அழகுடன் சேர்ந்திட
ஜாடையாய்பூக்களும்
அணியாய் மலர்ந்திட
வாடையில்...
22
Jul
சிவரூபன் சர்வேஸ்வரி
கலவரம்
நாளும் நடக்கும் ஆங்கங்கே கலவரம்
பொழுதும் அறியும் புதுப்புதுச் செய்திகள்
பாழும்...
22
Jul
செல்வி நித்தியானந்தன்
கலவரம்
நாடுக்கு நாடு
தீவிர வளம்
நானா நீயா
போட்டிக் களம்
நாளும் நடக்கும்
அழிவின் யுத்தம்
நாலா புறமும்
குண்டின்...