திசை தேடும் திருப்பங்கள்…

வசந்தா ஜெகதீசன் திசை தேடும் திருப்பங்கள்... வரையறை பதிந்திட்ட வரலாறு வாகையாய் எரிந்தது எம்மனது அகிம்சைக்குள் ஆகுதியான தீபம் வரலாற்றில்...

Continue reading

அழகின் மகிமை

நகுலா சிவநாதன்
அழகின் மகிமை

பசுமை போர்த்திய மலைகளிலே
பனித்துளி பேசும் பாலி…
நீலக் கடல் அலைகளிலே
நிலவொளி ஆடும் பாலி!

தென்னை மரம் தாலாட்ட,
தென்றல் வந்து முத்தமிட,
நெற்பயிர்கள் தலைவணங்கும்
நெஞ்சைக் கவரும் பாலி!

நீர்வீழ்ச்சி இசைபாட,
நதியோடு இயற்கை ஓட,
மலர்களெல்லாம் மணம் வீசும்
மாய உலகம் பாலி!

சூரியன் கடலில் மறையும்
செந்நிற மாலை நேரம்,
வானமும் கடலும் சேர்ந்திடும்
வண்ண ஓவியம் பாலி!

கோயில்களின் மணி ஓசை,
கலாசாரத்தின் இனிய வாசம்,
அன்பு நிறைந்த மனிதர்களோடு
அழகாய் சிரிக்கும் பாலி!

நகுலா சிவநாதன்1871

Nada Mohan
Author: Nada Mohan

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

Continue reading

செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

Continue reading