இயந்திரமனிதர்கள்…!!

தினக்கவி-2386!! சிவதர்சனி .இரா தொழில்நுட்பம் வளர்கிறது… தொலைந்து போகிறது மனிதம்; விரல்களின் நுனியில் வையகம் சுருங்க, விழிகளின் முன்னே உறவுகள் தொலைகின்றன! கைகோர்க்கும் நட்புகள் கைபேசிக்குள்...

Continue reading

இயந்திரமனிதர்கள்…!!

தினக்கவி-2386!!
சிவதர்சனி .இரா
தொழில்நுட்பம் வளர்கிறது…
தொலைந்து போகிறது மனிதம்;
விரல்களின் நுனியில்
வையகம் சுருங்க,
விழிகளின் முன்னே
உறவுகள் தொலைகின்றன!

கைகோர்க்கும் நட்புகள்
கைபேசிக்குள் சிறைபட,
கண்களில் மலர்ந்த புன்னகை
திரைகளுக்குள் தொலைந்தது;
அன்பைத் தேடும் கரங்கள்
அருகில் இருந்தும்
தொலைதூரம் செல்கின்றன!

காதலும்… பாசமும்…
கனிவும்… உறவும்…
நாளைய தலைமுறைக்கு
அருங்காட்சியகப் பொருட்களாய்
காட்சிக்கு வைக்கப்படுமோ?

இயற்கை தந்த
இனிய பூமியிலே,
இயந்திரங்களின் நிழலில்
மனிதன் தானே
சிறைக்கைதியாகிப் போகிறான்!

மனிதன் படைத்த
இயந்திரம் ஒருநாள்
மனிதனை ஆளத் தொடங்கினால்,
மனிதன் எங்கே?
மனிதம் எங்கே?

இயந்திரங்கள் மனிதராய்
நடமாடும் நாளில்,
மனிதர்களே
விந்தைப் பொருளாய்
மாறிவிடுவார்களோ?

Nada Mohan
Author: Nada Mohan

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

Continue reading

செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

Continue reading