17
Sep
இரா.விஜயகௌரி
மொழியே முகவரி மொழித்திறன் விரல் வழி
எழுத்தே இலக்கென இழைத்திடல் எழில் வழி
கொடுத்தலில் விரித்தெழும்...
17
Sep
மொழியே அடையாளம்
சக்தி சிறினிசங்கர்
இனிது வாழ இன்றே முந்துவோம்
கனவு காணுதல் கடமையாய் எண்ணுவோம்
நனவாய் ஆக்க நாமும்...
17
Sep
மொழியே முகவரி
மொழியே முகவரி
மொழியே முகவரி
உயிரே என் தாய்மொழி
வழியே பேசும் வரலாறும் கூறும்!
வாழ்வாங்கு...
மொழியே முகவரி
இரா.விஜயகௌரி
மொழியே முகவரி மொழித்திறன் விரல் வழி
எழுத்தே இலக்கென இழைத்திடல் எழில் வழி
கொடுத்தலில் விரித்தெழும் குமுகாய பெருவழி
செழிப்பாய் மொழிதலில் சிந்திடும் அமிழ்தென
அள்ளிட அள்ளிட குறையாச் செல்வமாய்
அட்சய பாத்திர தலைமுறை புதையலாம்
சுவைபடச் செப்பிட செந்தமிழ் இனித்தெழும்
குழந்தைகள் குலவிடின் குவலயம் நிலைத்திடும்
இயல்புற மொழிதலும் அழகுற இழைதலும்
நாளும் நாளுமே நயம்பட விதையுறும்
கொடுப்பதில் குறைவரின் முகவரி சிதைந்திடும்
உறவின் பின்னலே குழைந்திடிம் மொழிதனில்
உதிரத்தில் பின்னிய போராட்ட பெருவெழி
மொழியின் முகவரி தொலைத்து நாம் மாள்வதோ
தேனினும் இனியதாம் சொத்தினை இழப்பதோ
குழந்தைகள் செவிதனில் நித்தமும் செப்புவோம்
Author: Nada Mohan
08
Sep
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
08-09-2026
மண்ணில் வாழும் மானிடனே
விண்ணைத் தொடவே ஆசையேனோ?
கண்ணுறங்காமல் பொருள்...
30
Aug
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
01-09-2025
வாழ்க்கைப் பயணத்தில்
வண்ணமாய் குதூகலம்
நொடிப் பொழுதினிலே
நெஞ்சினை மகிழ்விக்கும்
குயிலின் பாட்டினிலே
கடலின்...
12
Aug
செல்வி நித்தியானந்தன்
குதூகலம்
கோடை வந்தாலே
கொண்டாட்டம்வந்திட
ஆடையும் மாறியே
அழகுடன் சேர்ந்திட
ஜாடையாய்பூக்களும்
அணியாய் மலர்ந்திட
வாடையில்...