புத்தாண்டே வா -56

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 10-04-2025 புத்தாண்டே வா புதுமை பொலிவுடனே புலத்தில் நிம்மதியும் பூகோளத்தில் அமைதியும் சோகங்கள் விட்டு சொந்தங்கள் சேர்ந்து சொல்பேச்சு கேட்டு சொர்க்க...

Continue reading

இன்னமும் மாறவில்லை

நகுலா சிவநாதன் இன்னமும் மாறவில்லை காலநிலை இன்னமும் மாறவில்லை கடும் குளிரும் குறையவில்லை பாட்டு வெயிலும் பகலவன் ஒளியும் கூட்டுது...

Continue reading

Jeya Nadesan

தினம் ஒரு பாமுகக் கவி-5.01.2022 செவ்வாய்
கவி இலக்கம்-1447
மலரட்டும் நம் நாடு
————————-
மண் வளமும் நீர் வளமும்
இயல் வளமும் இசை வளமும்
கலை வளமும் பண்பாட்டு வளமும்
கொண்ட நாடே எம் தாய் நாடு
தொன்மை மிகு தமிழ் மொழியில்
புகழ் பெற்று வாழ்ந்த எம் மூத்தோர்
மங்காப் புகழ் பெற்ற தமிழையும்
கலைகள் அத்தனையும் வளர்த்தனரே
பண்பாட்டு விழுமியங்கள் பலதை
பண்பாடாய் நிலை நிற்க உழைத்தவர்கள்
சான்றுகள் பலதையும் விட்டுச் சென்றனரே
ஒன்றாக நின்று ஒற்றுமையின் பலமாகி
உழைத்த பலர் வரலாறு படைத்தனரே
ஒளி இருந்தும் இருளை எதற்கு
வழி இருந்தும் வலி எதற்கு
துணிந்து நின்று மூத்தோர் வழி நடப்போமே

Nada Mohan
Author: Nada Mohan

    வஜிதா முஹம்மட் சந்திர நாட்காட்டி சரித்திர வழிகாட்டி புனிதப்பட்ட மாதம் புரையோடிய பாவத்தின் மன்னிப்பு நோன்பின்நேரம் இறைகட்டளையை நினைவூட்டி மனித...

    Continue reading