முதியோரின் புலம்பல் 2169 ஜெயா நடேசன்

தவிக்கிறேன் தவிக்கிறேன் தனிமையில் மூலையில் முடங்கி கிடக்கும் நிலை கண் தெரியாத பாவியாகி விட்டேன் கைப்பிடித்து தெருவில்...

Continue reading

Jeya Nadesan

வியாழன் கவிதை நேரம்-30.03.2023
கவிதை இலக்கம்-1666
ஊற்றான உயிர் நீர்
——————————-
இயல்பு வாழ்வில் உயிர்களுக்கு
இயற்கை கொடையே அதில்
ஐம்பூதங்கள் மிக முக்கியமாக நீரே
நிறை வாழ்விற்கு நீரே உயிர்
சுட்டெரிக்கும் வெயிலுக்கும்
தாகம் தீர்ப்பதற்கும் தேவையானது நீரே
பசும் புல் தரையும் மரம் செடிகளும்
நெல் வயல்களும் விலங்கினங்களும்
நீரின் வளர்ச்சியில் உயிர் கொடுப்பனவே
வாய்க்காலின் ஓரமதில் வழிந்தோடும் நீரில்
உறிஞ்சி குடித்தும் குளித்தும்
தாகம் தீர்க்கும் புள்ளினங்கள் அதிகமே
பணம் கொடுத்தும் உப்புடை நீர் குடித்தும்
பல நாடுகளில் உயிர் வாழ்கின்றனரே
வீடுகளில் வீணாக விரயம் செய்பவர் பலரே
குழாய்கள் நீர் ஓடும்போது போக முடியாது
வீட்டு குப்பைகள் தேங்கி நின்று்
சாக்கடைகள் உண்டாகி துர் நாற்றமே
பேணி சிரட்டை குட்டை நீர் தங்குவதில்
நுளம்பு பெருக்கம் அடைந்து
டெங்கு தொற்று பரவ வழி சமைக்கிறதே
உணவு கழிவுகள் பிளாஸ்ரிக் குப்பைகள்
கப்பல்களில் கசியும் இராசாய எண்ணெய்கள்
கடலில் கொட்டுவதில் மாசு பட்டு
கடல்படு திரவியங்கள் அழிந்து போகின்றனவே
ஊற்றான உயிர் நீரை காப்போம்
விழிப்புணர்வை ஏற்படுத்தி வாழ்வோம்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் அன்னை தரணியில் தாய்க்கு நிகர்யாதும் உண்டோ தற்பெருமை இல்லா காத்திட்ட தெய்வம் அழகுபெற்ற வதனம் பழகுவதும் உறவாய் அன்பிலே இருப்பிடம் பண்பிலே மேலானவர் எட்டுமகவுகள்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் மூத்தோர்... உராய்ந்து உராய்ந்து தேய்ந்திட்ட உளிகள் உருவாக்கிட உழைத்து ஒய்ந்திட்ட உயிர்கள் தளர்ந்தே இன்று தள்ளாடும்...

    Continue reading