மாதரின் மறுபக்கம் 88

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 12-03-2026 தாலாட்டும் கைகளும் தடைகளை தந்தாலும் முன்னேற்றும் விழிப்போடு வரலாற்றை வகுக்கிறாள். சமையலறையே கதியற்று சாதிக்கும்...

Continue reading

Jeya Nadesan

கவிதை வாரம்-11.08.2022
கவி இலக்கம்-1555
பசி
——————–
பசி வந்தால் புசித்திட வேண்டும்
பாரினில் பகிர்ந்து அளித்திட வேண்டும்
மனதை நெகிழ வைத்த சம்பவமாய்
பசித்த முகம் கவலை கசிந்த முகமாய்
வயிற்று பசிக்காய் ஏங்கி நிற்கும் குழந்தை
மகளின் பசி போக்க தகப்பனின் ஏக்கம்
பெற்றவர் பிள்ளை நிலை கண்டு வாடுகிறார்
கையில் ஒன்றுமில்லை பசி போக்கவே
களவு எடுக்க நிலையாகி விட்டதே
தகப்பன் செயல் கண்டு பிள்ளை கலங்கிறாள்
தன் செயல் கண்டு மனம் புழுங்கிறார்
தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்க முனைகிறார்
கடைக்கார் தயாள குணமுடையவராக
மகளாரிடம் தன் அன்பை பகிர்கிறார்
ஏழ்மையின் கண்ணீரில் இறைவனை காண்கிறார்
மற்றவரும் அரிசிப் பொட்டலம் உதவுகிறார்
உலகம் எங்கும் வாழும் உறவுகளில்
உயர்ந்தோர் என்பது உணவுக் கடையில்
உண்மையான பிறர் அன்பை கண்டேன்
உதட்டில் மட்டுமல்ல உள்ளத்திலுமே
மனதை குளிர வைத்ததே
இன்றே இதை நாமும் உணர்ந்தே
இனிய உணவை அளித்தே மகிழ்ந்திடுவோம்
உறவும் உற்றாரும் புகழ்ந்து ஏற்றிடுவர்
இறைவனும் உதவியர்க்கு பலன் கொடுப்பார்

Nada Mohan
Author: Nada Mohan

    பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

    Continue reading