Jeya Nadesan

வியாழன் கவி நேரம்-06.04.2023
கவிதை நேரம்-1670
நிரந்தரம்
——————
மனித வாழ்வில் எதுவுமே
நிரந்தரம் என்பது கிடையாது
இன்றிருப்போர் நாளையில்லே
இன்ப துன்ப வாழ்வுதனில்
துவண்டு விடாமல் எழும்புதல்
நிரந்தர வாழ்வில் ஒரு சாதனையே
பிறரை நம்பி வாழ்வோருக்கு
சோம்பல் என்றும் நிரந்தரமே
உழைத்து உண்டு வாழ்வோருக்கு
நிம்மதி என்றும் உயர்தரமே
கூட்டுக் குடும்ப வாழ்விற்கு
சமத்துவம் என்றும் ஆதாரமே
சோதனை பலதும் வந்திடின்
சாதனை படைத்திட முயல்வதும்
எதிர்பார்ப்பு இன்றி வாழ்வதும்
நேரம் ஒதுக்கி பலதை செய்வதும்
உழைப்பில் பலன் பெறுவதும் சரித்திரம்
ஆரோக்கிய வாழ்வில் நலன் ஆதாரம்
உணவு அப்பியாசம் கவனிப்பில் நிரந்தரம்
தனிமையில் வாழ்வு சிலருக்கு சுதந்திரம்
சுதந்திரம் வாழ்வில் கிடைப்பது அவசரம்
நிரந்தர வாழ்வில் புது வாழ்வு கிடைப்பதும்
இறைவன் கொடுத்தது பெரும் வரம்

திருத்தி பதிந்து இருக்கிறேன் இதனை வாசிக்கவம்

Nada Mohan
Author: Nada Mohan