தேடும் உறவுகளே…
பேரெழில் நாடு
Jeya Nadesan
வியாழன் கவிதை நேரம்-13.04.2023
கவிதை இலக்கம்-1673
சித்திரை வந்தாலே
————————-
சித்திரை பிறந்தாலே பத்திரமாய்
முத்திரை பதித்திடும் காலமாய்
உலக மக்கள் வாழ்வில் பல மாற்றமாய்
தமிழ் புத்தாண்டாக தரணியிலே
சீரான சிறப்பு மிக்க மாதமாய்
சித்திரை புத்தாண்டே வசந்த காலமாய்
இன்னல் தீர்த்து ஈடற்ற உதித்திடுவாய்
அல்லறும் மக்களின் அவலம் தீர்த்திடுவாய்
இருள் அகற்றி ஒளித் தீபம் ஏற்றிடுவாய்
இன்முகங்கள் பல முகங்கள் ஒன்று சேர்ந்து
ஒற்றுமையாய் வாழ வழி சமைத்திடுவாய்
பல வர்ணப் பூக்கள் பாரெங்கும் மலர்ந்திட
இயற்கையின் கொடையாக வனப்பாகிறாய்
குருவிக் கூட்டங்கள் இனப் பெருக்க மாதமாய்
கீ கீ கீச்சென ஓசையும் மனதிற்கு மகிழ்வானாய்
புதுமைகள் பலதும் தந்திட சித்திரை வந்தாலே
புதுப் பொலிவுடன் புத்தாடை அணிந்து
கோவில் சென்று கும்பிட்டு ஆசீர் பெற்று
வருக வருகவென மன மகிழ்வுடன் வரவேற்போம்
புவியினிலே மங்களகரமாக ஏற்று மலர்வோம
