தாங்கமுடியவில்லை..!!

தாங்கமுடியவில்லை பத்து நாட்கள் திருவிழா பரவசமாய் முடிவு பெற பக்தியுடன் சனங்களும் புடைசூழ்ந்து நிற்கவே காவடி கற்பூரச்சட்டி அணிவகுத்து செல்ல அம்மன் பவனிவர அரோகரா...

Continue reading

Jeya Nadesan

கவிதை நேரம்-20.04.2023
கவி இலக்கம்-1675
வசந்த காலம்
———————
வசந்த காலம் வந்து உதித்ததே
நினைவில் என்றும் வசந்த காலம்
கனவில் இன்று கோடை காலம்
சுற்றுலா சென்றோர் வசந்தம் வர வேற்பர்
நீரை நாடி ஓடி அரை குறை ஆடை குறைப்பர்
உற்றார் உறவினருடன் உண்டு கழித்து மகிழ்வர்
இளையோர் புதுப்புது நாடுகள் செல்வர்
ஓய்வு எடுத்து உண்டு மகிழ்ந்து புதினங்கள் அறிவர்
பச்சைப் பசேலென புற்தரை அழகிய காட்சிகள்
இலை துளிர் விட்டு அரும்புகள் பிரசவிக்கும்
மொட்டுகள் அரும்பு விட்டு அழகாக மலரும்
தேனீக்கள் ரீங்காரம் பாடி தேனை உண்டு மயங்கும்
பூக்கள் கூட மகரந்தம் காற்றறோடு கலக்கும்
தம்மினம் பெருக்கி மகிழ்ந்து சிறக்கும்
சில மக்களிடையே ஒவ்வாமை ஏற்பட செய்யும்
கண் கடி மூக்கு சிந்தல் தும்மல் ஏற்படுத்தும்
காற்றும் இனித் தென்றலாய் வீசும்
வசந்தம் இறைவன் வரமென எதிர்பார்ப்போம்
இயற்கையின் கொடையென பலன் பெறுவோம்்
வளமாக வாழ்ந்து சிறப்புடன் அனுபவிப்போம்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இசை இசையோடு எல்லாம் இவ்வுலகுஇணைத்திடும் பசைபோல ஒட்டியே பாரினில் சிறந்திடும் அகிலத்தில் எல்லாமே இசையோடு சேர்ந்திடும் அன்றாட ...

    Continue reading