மாதரின் மறுபக்கம் 88

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 12-03-2026 தாலாட்டும் கைகளும் தடைகளை தந்தாலும் முன்னேற்றும் விழிப்போடு வரலாற்றை வகுக்கிறாள். சமையலறையே கதியற்று சாதிக்கும்...

Continue reading

Jeya Nadesan

கவிதை நேரம்-08.06.2023
கவி இலக்கம்-1702
எழுத்தின் வித்தே
பூத்தெழும் தமிழே
——————————–
எண்ணும் எழுத்தும் முத்தென வளரும்
இவை இரண்டும் கண்ணென தகும்
எழுத்திலிருந்து மலர்ந்ததே தமிழே
அன்னைத் தமிழை எழுத்தறித்தவன் இறைவனே
அன்பும் பண்பும் படிக்க வைத்த தமிழே
பலரை உயர் நிலைக்கு ஏற்றிடுமே
உலகம் முழுவதும் பூத்தெழும் தமிழே
மண்ணில் விழுந்தாய் வித்தாய் முளைத்தாய்
தனி மரமாக பாரெங்கும் பரந்து செழித்தாய்
எம் விளை நிலமாகி பரவி உயர்ந்தாய்
எங்கும் ஜொலிப்பாய் இனிய கன்னித் தமிழே
தாயின் கருவறையில் முதலில் கேட்ட தமிழே
மழலை நிலையில் வாயாற பேசிய தமிழே
ஆசான் கையில் எழுத்தின் வித்தான தமிழே
கவிஞனாக வடிவமைக்க வரி தந்த தமிழே
எழுவாய் உயர்வாய் உலகம் சிறக்க
வாழ்வாய் நிலைப்பாய் எம் இன்பத் தமிழே

Nada Mohan
Author: Nada Mohan

    பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

    Continue reading