Jeya Nadesan

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-20.06.2023
கவி இலக்கம்-226
மணி
—————-
கோவில் மணி ஓசை
காலை காதுக்குள் ஒலிக்குமே
எலாம் மணி ஓசை
தூக்கத்தில் எழுப்புமே
கண்ணின் கரு மணிகள்
பார்வையில் சிறக்குமே
நெல் மணிகள் விதைப்பில்
வயிற்று பசி தீர்க்குமே
குண்டு மணி தங்கம் நிறுக்க
தராசில் ஏற்ற தாழ்வில் நிற்குமே
செம்மணி மயானம் இன்னும் பல
மறைந்த உறவுகளை நினைவூட்டுமே
பச்சைமணி நிற கழுத்து மாலையாக
குறத்தியர் கழுத்தில் தொங்குமே
கண்மணி சின்னமணி பொன்மணி
தங்கமணி நவமணி தவமணி
பெண்கள் அற்புத பெயராமே
நவ மணிகள் பெண்கள் கழுத்தில்
ஆபரணங்களாக ஜொலிக்குமே
உழவர்கள் வயல் வழிப் பயணம்
காளை மாடுகள் சலங்கை மணி ஆர்ப்பரிக்குமே

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் நாடகம்... முத்தமிழின் கூட்டுக்கலை முழுநீள அழகுக்கலை வரலாற்றுப் பேரெடும் வந்திணைத்த கதைகூறும் இசையோடு இயலும் இணைந்தாகும்...

    Continue reading