தாங்கமுடியவில்லை..!!

தாங்கமுடியவில்லை பத்து நாட்கள் திருவிழா பரவசமாய் முடிவு பெற பக்தியுடன் சனங்களும் புடைசூழ்ந்து நிற்கவே காவடி கற்பூரச்சட்டி அணிவகுத்து செல்ல அம்மன் பவனிவர அரோகரா...

Continue reading

Jeya Nadesan

கவிதை நேரம்-08.02.2024
கவி இலக்கம்-1815
இருளில் நின்று விடை பெற
————————————
உலகமே இருள் மூடிய சூழ்நிலை
போர் போட்டியும் அழிவு மரணமும்
பஞ்சம் பட்டினியும் பிணி நோய்களும்
குழந்தை மரணமும் கர்ப்பிணி போஜாக்கின்மையும்
ஏக்கமும் ஏமாற்றமும் அடைகிறான் மனிதன்
பல கனவுகளை கற்பனையில் நிறுத்தி
உழைப்பின்றி கதறிக் கண்ணீர் விட்டு அழுகிறான்
அற்ப சுகத்திற்கு அளவுக்கு அதிக ஆசை வைத்து
வேதனையையும் களைப்பையும் பெற்று
நோயை விலைக்கு வாங்கி குவிக்கிறான்
அறிவு ஆற்றலின் மேம்பாட்டில்
ஆயுதங்களை தனதாக்கி ஆட்டம் போடுகிறான்
வன்முறை போதை வஸ்து களவு பழக்கங்கள்
பழக்கப்பபட்ட மாதிரி செயலில் அடிமையாகிறான்
ஆட்சிப்பீட அதிகாரத்தில் அநிநாயக செயல்களால்
அரக்கன் ஆகி போட்டி பூசலில் திண்டாடுகிறான்
இருளின் அழிவின் விளிம்பினிலே இருளகற்றி
விடுதலை பெற்று விடிவு பெற்று வாழ வேண்டுவோம்

Nada Mohan
Author: Nada Mohan